நோயாள் இறந்த தொழிலகப் பொறியியல் ஜேஏஎம்பி அமரசிங்க அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் பணியில் ஈடுபட்டுருந்த தொழிலகப் பொறியியல் ஜேஏஎம்பி அமரசிங்க வீர்ர் நீண்ட கால வியாதி காரணமாக இறந்தார்.குறித்த காரனத்தினால் “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று(11) மரதன்கடவல அவருடைய விட்டில் வைத்து மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த வீர்ர் 2011 ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி இலங்கை தொண்டர் கடற்படைக்கு தச்சு பிரிவின் வீர்ராக கடற்படைக்கு சேர்ந்துள்ளார். பல்வேறு கடற்படை நிருவனங்களில் பணிகள் செய்துள்ள இவர் இறந்த போது வெலிசர இலங்கை கடற்படை கப்பல் மஹசென் நிருவனத்தில் பணியில் ஈடுபட்டுருந்தார். ஒரு பிள்ளையின் தகப்பனான இவர் நோயாள் இறக்கும் போது 25 வயதானார்.

பொது அல்லாத நிதியத்தின் கீழ் கடற்படை வீரர்களுடைய ஒரு காப்பீட்டாக பராமரிக்கப்படுகின்ற கடற்படை நெவுரு சவிய சுவசஹன காப்புறுதி நிதியம் கடற்படை தளபதியின் நேரடி மேற்பார்வையில் கிழ் நடத்தப்படுகின்றன. நிதியத்தின் உறுப்பினர் அல்லது அவரது உறவினர்களின் மரணத்திற்கு, தீவிர நோய்களுக்கு, நிரந்தர அல்லது அரை உடல்நோய்கள், பொதுவான நோய்கள், வைத்திய சோதனைகள்காக குறித்த காப்புறுதி நிதியம் மூலம் காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும்.