கடலில் மிதந்த 9 கோடி பெருமதியான ஹெரோயின் கடற்படையினரால் மீட்பு
 

காங்கேசன்துறை துறைமுகதிலிருந்து சுமார் 08 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் சுமார் 9.3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (12) காலை 1050க்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான கரையோர பாதுகாப்பு பிரிவினரின் படகொன்றில் சென்ற படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்து வந்த பொதி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அதனை காங்கேசன்துறை துறைமுகதிக்குகொன்டுவந்து காங்கேசன்துறை பொலிஸாரின் உதவியுடன் சோதனையிட்டபோது ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் சுமார் 9 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட ஹெரோயின்  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.