அவுஸ்திரேலிய “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு
 

அவுஸ்திரேலிய அரசாங்கின் “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பல் இன்று(16) இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமல துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்.

கப்பல் திருகோணமல துறைமுகத்தில் அஷ்ரொப் படகுத்துறைக்கு வந்தடைந்த பின் கிழக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கப்பலில் இனை பார்வையிட விஜமொன்றை மேற்கொண்டுள்ளனர்.அப்பொலுது கப்பலில் கூட்டு ஏஜென்சி அதிரடிப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் அவர்களால் கப்பலில் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கைகளை பற்றி அதிகாரிகளுக்கு அறிந்தி குடுக்கப்பட்டுள்ளது.

அதின் பிரகாசமாக கப்பல் குழுவின் பிரதிநிதிகள் கிழக்குக் கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னைய்யா அவர்ளை சந்தித்தனர். குறித்த சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

குறித்த நிகழ்வுக்காக இலங்கையின் அவுஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதிமெதகு ப்ரைஸ் பவசன்,அவுஸ்திரேலிய கடல்சார் எல்லைப்பகுதி படையின் துணை தளபதி கமான்டர் ஜோ க்ரூஸ் ஆகியவர்கள் மற்றும் இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஜேசன் சியர்ஸ் அவர்களும்,சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் கழந்துகொன்டனர்.