கனடிய கடற்படை கப்பல் “வினிபெக்” கொழும்பு வருகை
 

கனடிய கடற்படையின் “வினிபெக்” கப்பல் பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த இக்கப்பள்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்

மேலும், இம்மாதம் 25ம் திகதி புறப்படவுள்ள இக் கப்பலில் சிப்பந்திகள் நாட்டில் தங்கிருக்கும் காலத்தில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கப்பல் பயிற்சிகள், சிநேகபூர்வமான சந்திப்புகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.