இந்திய கடற்படை கப்பல் “சுமேதா” கொழும்பு வருகை
 

மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்திய கடற்படையின் ஆழ்கடல் பகுதி ரோந்து உயர் தொழில்நுட்ப கப்பலான “சுமேதா” இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த இக்கப்பள்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்

இம் மாதம் 24ம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள காலத்தில் குறித்த கப்பலில் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கப்பல் பயிற்சிகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.மேலும் குறித்த கால பகுதியில் கப்பலின் கட்டளை அதிகாரி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மேற்குக் கடற்படை கட்டளை தளபதிவுடன் சிநேகபூர்வமான கழந்துராடலில் ஈடுபட உள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டில் 57 போர்கப்பல்களும் இந்த ஆணடில் 20 போர்கப்பல்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.