பாக்கிஸ்தான் சிரேஷ்ட கடற்படை பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பாக்கிஸ்தான் சிரேஷ்ட உயர்மட்ட கடற்படை அதிகாரிகளின் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (22) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். குறித்த குழுவுக்கு பாக்கிஸ்தான், கராச்சி கப்பல் தளம் மேலாண்மை இயக்குநர் மற்றும் பொறியியல் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் சையத் ஹசன் நசீர் ஷா அவர்கள் கேப்டன் எம் ஜஹன்சிப் அஹசான்,கேப்டன் ஹம்மாட் அகமது மற்றும் லெஃப்டினென்ட் கமாண்டர் (ஓய்வு) பி என் எஸ்ஸாம் ஆகியவர்கள் கழந்துகொன்டனர்.

குறித்த சந்திப்பிற்காக இலங்கை கடற்படை பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (பொறியியல்), ரோஹித்த பிரேமசிறி அவர்களும் கழந்துகொன்டார் குறித்த இச்சந்திப்பின் போது இலங்கை கடற்படையின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கராச்சி கப்பல் தளத்தின் வசதிகள் மற்றும் பொறியியல் நடவடிக்கைகள் பற்றியும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.