வெற்றிகரமான விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர இலங்கை வருகை
 

இலங்கை கடற்படையின் இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர வெற்றிகரமான விஜயத்தின் பின் இன்று(25) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.இவர்கள் இலங்கைக்கு பயணம் செய்கையில் போது சிங்கப்பூர் கடற்படையுடன் பல கப்பல் பயிற்சிகளில் பங்கேற்றனர்.

கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திட்கு வந்தடைந்த பின் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் அனுர தனபால மற்றும் கேப்டன் நிஷாந்த பீரிஸ் மேற்கு கடற்படை பிரிவின் துணை தளபதி கொமடோர் சனத் உத்பல ஆகியோருக்கிடையே சுற்றுப்பயணத்தின் நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடல் இடம் பெற்றன.

குறித்த கப்பல்கள் கடந்த 05ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் கழந்துகொள்ளும் நோக்கத்தின் கொழும்பு துறைமுகத்திட்டு சென்றது. கப்பல்கள் இம் மாதம் 12 திகதி முதல் 18 வரை சிங்கப்பூரில் நங்கூரமிடப்பட்டுள்ளது. குறித்த உத்யோகபூர்வமான விஜயத்துக்காக சாகர மற்றும் நன்திமித்ர கப்பல்களின் 34 அதிகாரிகள் உட்பட 290 சிரேஷ்ட மற்றும் இளைய வீர்ர்கள் கழந்துகொன்டனர்.அங்கு அவர்கள் போர்க் கப்பல்கள் காட்சி, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு,சர்வதேச கடல்சார் பொறியியல் மாநாடு, கடற்படை பிணைய திட்டம் ஆகிய நிகழ்வுகளின் பங்குபெற்றனர்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவனம் கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்த இந்த ஆண்டு கண்காட்சிக்காக 20 நாடுகள் குறித்து 29 கப்பல்கள் பங்குபெற்றன.