நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருகை
 

தற்போது நிலவுகின்ற வெள்ள அனர்த்த நிவாரண பணிகளுக்குஉதவும் வகையில் நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இன்று (மே, 27) கொழும்பு துறைமுகம் வந்தடைதுள்ளது.

குறித்த கப்பலில் கட்டளைத்தளபதி பிரிஜேஷ் நம்பியார்தலைமையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில்வைத்தியர்கள் மற்றும் சுழியோடிகள் உள்ளடங்கலாக 120 கடற்படை வீரர்கள்வருகைதந்துள்ளனர். மேலும் இக்கப்பலில் உலருணவு, குடிநீர் போத்தல்கள், தற்காலிக கூடாரம் மற்றும் மருந்து வகைகள் என்பன கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே நீண்ட கால நட்பு மற்றும் ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்து இது இலங்கைக்கு வழங்க கெளரவ பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக, இலங்கைக்கான இந்திய உயரிஸ்தானிகர் அதிமேதகு தரஞ்சித் சிங் சன்ஹு, மேற்குகடற்படை கட்டளைத்தளபதி ரியர் எட்மிரல் நிராஜா அட்டிகல, கடற்படை தலைமையாகஅதிகாரிகள், இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ்மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகைதந்திருந்தனர.