பத்தேகம, வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற மேலும்கடற்படையினர் உதவி
 

காலி பத்தேகமயிலுள்ள வாக்வெள்ள பாலத்தினூடாக செல்லும்நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணிகளில்இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜின் கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த்ததால்போத்தல மற்றும் தெளிகட ஆகிய பிரதேசங்களை இணைக்கும் குறித்த பாலம் குப்பைகள்நிறைந்து நீரோட்டம் தடைப்பட்டதன் காரணத்தினால் பத்தேகம பிரதேசம் நேற்று (மே, 27) வெள்ள அனர்த்தத்திற்குள்ளனது.

இதன்பிரகாரம் கடற்படையின் 73 படை வீரர்கள் கொண்டகுழுவினர் விஷேட கடற்படை படகுகள் மூலம் குறித்த குப்பைகள் மற்றும் கம்புகள்ஆகியவற்றை அகற்றியுள்ளனர்.