மூன்றாவது இந்திய கப்பல் நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருகை
 

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவிநடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் கேப்டன் டீ வீ சுனில் அவர்களின்தலைமையிலான மூன்றாவது இந்திய கடற்படை கப்பல் “ஜலஷ்வா” இன்று (மே, 30) கொழும்பு துறைமுகம் வந்துள்ளது.

குறித்த கப்பலில் வெள்ள நிவாரணமப்பனிகளை மேற்கொள்ளும்வகையில் மூன்று வைத்திய குழுக்கள், நான்கு உயிர் காப்பு குழுக்களும், மீட்புநடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஆறு சிறிய ரக படகுகளும்எடுத்துவரப்பட்டுள்ளது. அத்துடன், உலருணவு, குடிநீர் போத்தல்கள், தற்காலிககூடாரம் மற்றும் மருந்து வகைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும்கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலின் வருகையினை வரவேற்கும் நிகழ்வில்ஜனாதிபதி செயலாளர் பீ பீ அபேகோன், இலங்கைக்கான இந்திய உயரிஸ்தானிகர்அதிமேதகு தரஞ்சித் சிங் சன்ஹு, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திரவிஜேகுனரத்ன, இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ், அரச அதிகாரிகள் மற்றும் கடற்படை தலைமையாக அதிகாரிகள் உள்ளிட்டோர்வருகைதந்திருந்தனர்.

மேலும், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தும்வகையில் நிவாரணப் பொருட்களுடன் இரு இந்திய கடற்படை கப்பல் இம்மாதம் 27ம்மற்றும் 28ம் திகதிகளில் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.