வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது
 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகபாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் செயற்பாடுகளில்இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுமற்றும் அவசியமான மருத்துவ வசதிகளை வழங்கப்படுகின்றன.

மேலும், இரத்னபுரி, பதுரேலிய மற்றும் வத்தேகம ஆகியபிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமானகுடிநீரினை வழங்கும் வகையில் மூன்று நடமாடும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைகடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவு நிறுவியுள்ளது.இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 5000 லீட்டர் சுத்தமான குடிநீரினைப்பெற்றுக்கொள்ளமுடியும்.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை, காலி, இரத்னபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அசுத்தமடைந்துள்ள சுமார் 276 கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளிலும் கடற்படையினர் ஈடுபட்டனர்.

தெனியாய

31

மொரவக

65

தவலம

09

நெலுவ

27

புலத்சிங்கல

70

இரத்னபுரி

26

கலுத்தரை

48

அத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகளின்மருத்துவ குழுக்களுடன் இணைந்து இடம்பெயர்ந்துள்ள 1,765 பேருக்கான மருத்துவஉதவிகளையும் இலங்கை கடற்படையினர் வழங்கி வருகின்றனர். இம்மருத்துவ முகாம்கள்மாத்தறை, உடுகம, கலபத்த, புலத்சிங்கள, நாகொட மற்றும் எல்பிட்டிய ஆகியஇடங்களில் இடம்பெற்றது.

இதுவரை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட 9571 பேர்களை இலங்கைகடற்படையின் மீட்புப் பணிக்குழு பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றியுள்ளதுடன் 194,800ற்கும் அதிகமான உணவுப்பொதிகளையும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியல்விநியோகித்துள்ளது.