கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது
 

இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்குபாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்கநிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டைகடற்பிராந்தியங்களில் செயற்படுத்தப்படும் நடவடிக்கை மத்திய நிலையங்கள் மூலம்இப்புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

நடவடிக்கை சேவைகளில் கடல்வழி பாதுகாப்பு குழுக்கள் , ஆயுதங்களை பெறுதல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் , வெடிபொருட்கள் மற்றும் வர்த்தக கப்பல் கம்பனிகளுடன் மேற்கொள்ளப்பட்டஒப்பந்தத்தின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட சாதனங்கள் போன்றவற்றை ஏற்றிஇறக்குதல் என்பன அடங்கும்.

கடற்படையானது, கடல்வழி பாதுகாப்பு குழுவினை அரசிற்குநிதியினை நேரடியாக பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை மத்திய நிலையங்களை பொறுப் பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.