கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து அனர்த்த நிவாரணப்பணிகளில்
 

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள 100க்கு அதிகமான கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து காலி, மாத்தறை, கொழும்பு, மாவட்டங்களில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளின் இன்று (ஜூன் 12) ஈடுபட்ட்ள்ளனர்.

50 கடற்படை மரையின் வீர்ர்கள் மற்றும் 119 அமெரிக்க கடற்படை வீர்ர்கள் இணைந்து மாத்தறை மாவட்டத்தின் நில்வளா நதி பகுதியில் மறுசீரமைப்பு நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இதுக்காக மாத்தறை கோட்ட பொறியாளர் நிருவனத்தின் உதவி பெற்றது. இதற்கிடையில் 21 கடற்படை மரையின் வீர்ர்கள் மற்றும் 72 அமெரிக்க கடற்படை வீர்ர்கள் மற்றும் காலி மாவட்டத்திலும் கொழும்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் கிணறுகளை சுத்திகரித்தல் மற்றும் கழிவு நீரினை அகற்றுதல் போன்ற வேளைத்திட்டங்களில்மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலநேற்று ( ஜூன், 11) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது