நிகழ்வு-செய்தி

கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து அனர்த்த நிவாரணப்பணிகளில்
 

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள 100க்கு அதிகமான கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து காலி, மாத்தறை, கொழும்பு, மாவட்டங்களில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளின் இன்று (ஜூன் 12) ஈடுபட்ட்ள்ளனர்.

12 Jun 2017

பாகிஸ்தானிய கடற்படை தளபதி இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று (ஜூன், 12) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களளை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

12 Jun 2017

வவுனியா பல்கலைக்கழகத்தில் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று (20) வவுனியா, பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

12 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 உள்நாட்டு மினவர்கள் போல்டர் பாயிண்ட் கடல் பகுதியில் வைத்து ஜூன் 11ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளன

12 Jun 2017

காங்கேசன்துறை மாவடிபுரம் பகுதியில் மருத்துவ முகாம்
 

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூகநலத்திட்டங்களின் ஒரு பகுதியாக மருத்துவ முகாமொன்று காங்கேசன்துறை மாவடிபுரம் கிராமத்தில் அண்மையில் 2017 ஜூன் 10 திகதி முன்னெடுக்கப்பட்டது.

12 Jun 2017

96 கடற்படையினரின் வெளியேறும் நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படை தளபதி பங்கேற்பு
 

55வது கடட் உள்ளீர்ப்பு மற்றும் 01/2016 சேவை உள்ளீர்ப்பு அங்கத்துவத்தின் பிரகாரம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் 30வது மற்றும் 31வது ஆட்சேர்ப்பில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் ஆகிய துறைகளில் கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேறும் நிகழ்வு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் அணிவகுப்பு மைதானத்தில் நேற்று (ஜூன், 11) இடம்பெற்றது.

12 Jun 2017