பாகிஸ்தானிய கடற்படை தளபதி பிரதமருடன் சந்திப்பு
 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகையில் இன்று (ஜூன் 14) சந்திதித்துள்ளார். இன் நிகழ்வுக்கு இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களும் கழந்துக்கொன்டார்.

இச்சந்திப்பின் போது பிரதமர் மற்றும் பாகிஸ்தானிய கடற்படை தளபதி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

குறித்த நிகழ்வுக்காக இலங்கை பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இலங்கையின் பாக்கிஸ்தான் துணை உயர் ஆணையர் கலாநிதி சப்ராஸ் அகமது கான் சிப்ரா பாகிஸ்தான் கடற்படை தளபதியின் செயலாளர் கொமடோர் ஜாவேத் இக்பால் மற்றும் இலங்கையின் பாக்கிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் இர்ஷான் கான் ஆகியவர்கள் கழந்துகொன்டனர்.