கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து அனர்த்த நிவாரணப்பணிகளில்
 

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள 100க்கு அதிகமான கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளின் இன்று (ஜூன் 14) ஈடுபட்ட்ள்ளனர்.

12 கடற்படை மரையின் வீர்ர்கள் மற்றும் 33 அமெரிக்க கடற்படை வீர்ர்கள் இணைந்து காலி ஹினிதும மல்லிகா நவொத்யா பாடசாலையின் சுத்தம் செய்தல் நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் 41 கடற்படை மரையின் வீர்ர்கள் மற்றும் 136 அமெரிக்க கடற்படை வீர்ர்கள் இணைந்து மாத்தறை கால்வாய்கள் மற்றும் பாசன அமைப்புகளின் மறுசீரமைப்பு நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 11 கடற்படை மரையின் வீர்ர்கள் மற்றும் 31 அமெரிக்க கடற்படை வீர்ர்கள் இணைந்து 35 கிணறுகளை சுத்திகரித்தல் வேளைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலநேற்று ( ஜூன், 11) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது