இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 2089 நட்சத்திர ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (17) கல்பிட்டி, இப்பந்தீவு மற்றும் சின்ன அரிச்சால் இடையில் கடல் பகுதியில் வைத்து இந்தியாவில் இருந்து டிங்கி படகு மூலம் சட்டவிரோதமாக கொன்டுவரப்பட்ட 2089 நட்சத்திர ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகபர்கள், நட்சத்திர ஆமைகள் மற்றும் டிங்கி படகு ஆகியன இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சிந்நபாடு சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.