02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (29) புத்தளம் மதுரன்குளிய மற்றும் கலென்பின்துனுவெவ உபுல்தெனிய ஆகிய கிராமங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மதுரன்குளிய கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 450 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன.இதுக்காக சிரச கம்மெத்த 100 நால் திட்டம் மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.சிரச கம்மெத்த திட்டம் மற்றும் கடற்படை ஒன்றாக இணைந்து இது வரை 12 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கபடும், எதிர் காலத்திலும் கடற்படைவுடன் இணைந்து சிரச கம்மெத்த திட்டம் இந்த தேசிய முயற்சியில் பங்களிக்கும்.

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் சிறுநீரக நோய் ஆபத்தான பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுகின்றன.கடற்படயினரால் நிருவப்பட்டுள்ள 02வது சிறிய நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கலென்பின்துனுவெவ மஹதலாகம உள்ள (இரந்த) கேஏஎஸ்சி குமாரவின் விட்டில் நிருவப்பட்டுள்ளது.குறித்த இயந்திரம் குறுகிய காலத்தில் குறைந்த செலவில் தயாரிக்க கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் உருவாக்கபட்டுள்ளது.

இது வரை 222 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 107,040 குடும்பங்களுக்கு மற்றும் 76,520 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.