மேலும் ஒருநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திபிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (08)பொல்பிதிகம, கதுபொடகம பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.இது மூலம் அப் பகுதியில் 475 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதிபெருகின்றன. குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் ஒரு தினத்துக்கு 10,000 லீட்டர் சுத்தமான குடிநீர்வழங்கப்படுகிறது.

கடற்படை ஆராய்ச்சி மற்றும்அபிவிருத்தி பிரிவின் அறிவுமற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களுக்குசுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் நீர்சுத்திகரிப்புநிலையங்கள் நிருவப்படுகின்றன.இது வரை 227நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 107,985குடும்பங்களுக்கு மற்றும் 80,185 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்குசுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகையபல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.