கண்டி போதனா மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வுக்கு கடற்படை தளபதியின் பங்கேற்பு
 

கண்டி போதனா மருத்துவமனையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு சுகாதார மற்றும் ஊட்டச்சத்து உள்ளூர் சுகாதார அமைச்சர் டாக்டர் திரு ராஜித சேனாரத்ன அவர்களால் இன்று (13) திரந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கழந்துகொன்டார்.

மேலும் குறித்த நிகழ்வுக்காக கண்டி போதனா மருத்துவமனையில் இயக்குனர், மருத்துவ பணியாளர்கள், விஐபி நபர்கள், புகழ்பெற்ற விருந்தினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பொது மக்கள் கழந்துக் கொன்டுள்ளனர். குறித்த சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவின் நிறுவப்பட்டுள்ள சிறுநீரக நோய் சிகிச்சைகளில் இரத்த கூழ்மப்பிரிப்பு (டயாலிசிஸ்) செயல் முறைக்காக பயந்படுத்தப்படுகின்ற மிக சுத்தமான நீர் தயாரிக்கும் இயந்திரத்தை (Ultra Purified Water) இலங்கை கடற்படை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ள இரன்டாவது இயந்திரமாகும்.இதுக்கு முன்பு கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிருவப்பட்டுள்ள மிக சுத்தமான நீர் தயாரிக்கும் இயந்திரம் கடற்படை மூலம் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது இயந்திரமாகும். பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கமூக நலத் திட்டத்தின் மற்றொரு திட்டமாக இதை குறிப்பிடதக்கது.

இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் தயாரிக்கப்படுகின்ற மிக சுத்தமான நீர் சர்வதேசத் தர நிலையின் AAMI (Association of Advance Medical Instrumentation) கீழ் தயாரிக்கப்படுகின்றன. மேலும் சுதந்திரமான சர்வதேச ஆய்வகங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ள உயர்தர துருப்பிடிக்காத மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்ற குறித்த இயந்திரத்தின் வெளிநாட்டுச் சந்தை மதிப்பு சுமார் 13 மில்லியனாகும். ஆனால் குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் தயாரிக்க இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுக்கு 1.7 மில்லியன் செலவாகியது

எதிர்காலத்தில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மூலம் இத்தகைய நிர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இலங்கை முலுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர். சிறுநீரக நோய் இலங்கையின் முழுமையாகக் நீக்கப்பட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தின் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு மேற்கொள்ளப்படுகின்ற குறித்த திட்டம் உள்நாடு வெளிநாடு அனைவரும் பாராட்டியுள்ளன.