ரியர் அட்மிரல் டக்லஸ் பெரேரா கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

கடற்படையின் இயக்குனர் (பல்) ஆக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டக்லஸ் பெரேரா அவர்கள் இன்றுடன் (14) தமது 31 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுள்ளார். கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழத்துக்கள் தெரிவித்த பின் அவருக்கு கடற்படை மரபுகளின் படி ஒரு மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.

1986 ம் ஆண்ட்டில் நேரடியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர் தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.