இரு டால்பின்கள் கொன்று எடுத்துச் சென்ற இருவர் கைது
 

பிடிப்பதக்கு தடை செய்யப்பட்ட கடல் பாலூட்டிகள் வகையில் இரு டால்பின்கள் கொன்று எடுத்துச் சென்ற இருவரை இன்று (ஜூலை 15) தென் கடற்படை கட்டளையின் இனக்கப்பட்டுள்ள கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படை வீர்ர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளன.

இவர்கள் இரு மோட்டார்சைக்கிள்கள் மூலம் குறித்த மீனை எடுத்து செல்லும் போது தங்காலை, குடாவெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன. இந்த மீன்கள் சட்டவிரோதமாக பிடித்து படகுகள் மூலம் கரைக்கு கொண்டுவந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் மீன் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கலமெடிய வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.