ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் அமெரிக்கா உயர் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி ஓயிவு பெறவுள்ள கர்னல் ரொபட் நொக்ஸ் ரோஸ் அவர்கள் இன்று (17)  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.  

கடற்படை தளபதி அவர்களால் அவர் பணியாற்றும் போது கடற்படைக்கு வழங்கிய ஆதரவு பற்றி தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெறவுள்ள கர்னல்  ரோஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துடன் இன் நிகழ்வு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.