கழக இடையேயான சுப்பர் செவென்ஸ் மகளிர் ரக்பி தொடரின் வெற்றி பெற்ற கடற்படை அணிக்கு கடற்படைத் தளபதியின் பாராட்டு
 

கழக இடையேயான சுப்பர் செவென்ஸ் மகளிர் ரக்பி தொடரின் வெற்றி பெற்ற கடற்படை அணியின் வீரர்கள் இன்று (18)  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர். அங்கு அவர்களை பாராட்டிய கடற்படை தளபதி அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்வதற்காக பணப்பரிசுகளும் வழங்கியுள்ளார்.  

குறித்த நிகழ்வுக்காக கடற்படை ரக்பி அணியின் தளபதி, ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி, ரக்பி அணியின் செயலாளர் கேப்டன் புத்திக லியனகமகே, கடற்படை ரக்பி அணியின் பயிற்சியாளர் எம் ஜயதிலக மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் லெப்டினென்ட் டப்ஏ பத்மசிரி ஆகியவர்கள் கழந்துகொன்டனர்.

குறித்த போட்டி தொடர் கடந்த ஜூலை 08,09 மற்றும் 15,16 ஆகிய தினங்களில் கன்டி , நித்தவெல மற்றும் கொழும்பு குதிரைப் பந்தய மைதானங்களில் நடைபெற்றது. இப் போட்டி தொடரில் இருதி போட்டிக்காக இலஙகை இராணுவ அணி மற்றும் கடற்படை அணி தகுதிபெற்றது. குறித்த போட்டியில் புள்ளி 41க்கு 05 ஆக கடற்படை மகளீர் அணி வெற்றி பெற்றது.