காலி நடவடிக்கை மத்திய நிலையம் முலம் 10,000 கப்பல் பாதுகாப்பு போக்குவரத்து சேவைகள் நிறைவுசெய்துள்ளது

இலங்கை கடற்படையினர் காலி மத்திய நிலையம் ஊடாக சுமார் 10,000 க்கும் மேற்பட்ட கப்பல்கள் போக்குவரத்துக்கான பாதுகாப்பு சேவை நடவடிக்கைகளை வழங்கியுள்ளது

2015 நவம்பர் 13ஆம் திகதி முதல் குறித்த சேவையினூடாக அரசாங்கம் சுமார் மூன்று பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது, கடற்படையினர் இதுபோன்ற மேலும் இரு சேவை நிலையங்களை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய கடற்பிராந்தியங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

கடற்படையினரின் இந்நடவடிக்கை சேவைகளில் கடல்வழி பாதுகாப்பு குழுக்கள் , ஆயுதங்களை பெறுதல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் , வெடிபொருட்கள் மற்றும் வர்த்தக கப்பல் கம்பனிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட சாதனங்கள் போன்றவற்றை ஏற்றி இறக்குதல் போன்ற நடவடிக்கை உள்ளடங்கும்.

அதிமேதகு ஜனாதிபதியவர்களால் வெளியிடப்பட்ட சிறப்பு ஆணை மூலம் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு கடற்படையினருக்கு 2015 நவம்பர் 13 திகதி ஒப்படைக்கபட்டது. இது மூலம் கிடைக்கும் வருமானம் நேரடியாக அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு ஒப்படைக்கப்படும்