ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இரு போர்க்கப்பல்கள் கொழும்பு வருகை
 

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் (JMSDF) இரன்டு போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜூலை 20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த இக்கப்பள்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்.

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் மிகப்பெரிய போர்க்கப்பல் இசுமோ (Izumo) கப்பல் என்று கூறப்படுகின்றது. இக் கப்பலில் 05 ஹெலிகாப்டர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 248 மீட்டர் நீளம் மற்றும் 38 மீட்டர் அகலம் கொன்டுள்ள குறித்த கப்பலில் 970 பணியாளர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் யொஷிஹிரோ அவர்கள் பணியாற்றிகின்றார்.

மேலும் 151 மீட்டர் நீளம் மற்றும் 17.4 மீட்டர் அகலம் கொன்டுள்ள சசனமி கப்பலில் 175 பணியாளர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஹிரோடகா அவர்கள் பணியாற்றிகின்றார்.

மூன்று தின நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள இக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இலங்கை கடற்படையினருடன் கூட்டு கடற்படை பயிச்சிகளையும், கலை மற்றும் விழயாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளனர். மேலும் இரு நாடுகளில் கடற்படையினர் இனைந்து மனிதாபிமான நிவாரண மற்றும் பேரழிவு பதிலிறிப்பு பற்றிய கூட்டு பயிற்சியொன்றும் மேற்கொள்ளவுள்ளனர். குறித்த கப்பல்கள் இம் மாதம் 23ம் திகதி தாயாகம் திரும்ப உள்ளன.