ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) இலங்கைக்கு வந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

முதல் கடற்படை பாதுகாப்பு பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் யொஷிஹிரோ கோகா, “இசுமோ” மற்றும் “சசனமி” கப்பல்களில் கட்டளை அதிகாரிகளான கேப்டன் யொஷிஹிரோ கய், கொமான்டர் ஹிரோடகா ஒகுமுரா ஆகியவர்கள் கடற்படை தலைமை பணியாளரை சந்தித்துள்ளனர். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.