சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 5 சவுக்கு சுறாக்களுடன் 07 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 20) தெற்கு கடற்படை கட்டளையின் இனைக்கபட்ட கடலோர காவல்படையின் வீர்ர்களால் தங்காலை மீன்பிடி துறைமுகம் அருகில் வைத்து 05 சவுக்கு சுறாக்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடல் பகுதியில் வாழும் அரியவகை மீன்வகையான சவுக்கு சுறாக்கள் 70 கிலோ கிராம் முச்சக்கர வன்டி முலம் செல்லபடுத்த தயாராகும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடதக்கது. குறித்த சந்தேகநபர்கள் மற்றும் சுறா மீன்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தங்காலை, கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு, பொழுதுபோக்குக்கு மற்றும் விளையாட்டுக்கு மீன்பிடியில் இடுபடும் எவருக்கும் “எலோபிடே” வகைக்கு சொந்தமான குறித்த சவுக்கு சுறா மீன்கள் பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்த படகு உரிமையாளர்கள் அல்லது மாலுமிகள் இறந்த சவுக்கு சுறா உடல் அல்லது உடலை பகுதி படகில் வைத்திருப்பது, மற்ற படகுகளுக்கு பரிமாற்றுவது, இறக்குதல், சேமிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி இல்லை.