சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (ஜுலை 22) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மினவர்கள் நயாறு மற்றும் கோகிலாய் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 06 படகுகள், 200 மிட்டர் நீளமான ஒரு சட்டவிரோத வலை மற்றும் பிடிக்கப்பட்டுள்ள 500 கிலோகிராம் மீன் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.