கடலில் மூழ்கிய இரன்டு (02) யானைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் இன்று (ஜூலை 23) காலை திருகோணமலை, ரவுன்ட் தீவு மற்றும் கெவுலியா துடுவ பகுதி கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த இரன்டு (02) யானைகளின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளது.

ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடலோர படகு (ஐபிசி) மூலம் கடற்பரப்பில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானைகள் முதல் முரையாக கன்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் பரிபாலன திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களின் ஆதரவுடன் நிர்க்கதிக்குள்ளான குறித்த யானைகள் தொடர்பான மீட்புப்பணியில் கடற்படையினர்கள் செயற்பட்டனர். பின்னர் மூன்று துரித தாக்குதல் படகுகள் மற்றும் கடற்படை சுழியோடிகள் குழு ஒன்றும் குறித்த மீட்பு பணிகளில் ஈடுபதுவதுக்காக கடலுக்கு சென்றுள்ளன.

கடற்படையினரின் அயராத முயற்சியின் பயனாக கடற்கரைக்கு திசை திருப்பப்பட்ட குறித்த இரன்டு யானைகள் பாதுகாப்பாக கெவுலியா துடுவ பிரதேசத்துக்கு விடுதலை செய்யபட்டுள்ளது.

இதேபோன்று குறித்த கட்டளையின் கடற்படையினரால் கடந்த ஜுலை மாதம் 11ம் திகதி கோக்குதுடுவாய் இருந்து 08 கடல்மைல்கள் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானை ஒன்றின் உயிரினையும் வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளது.