இலங்கை கடற்படைக்கான இந்தியாவில் நிர்மானிக்கப்பட்ட தொழில் நுட்ப கப்பல் கொழும்பு வருகை
 

நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தின் இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் இன்று(28) காலை 0930 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பளை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்.

கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன்(திசைகாட்டி) நிஷாந்த அமரோசா அவர்கள் உட்பட இக் கப்பலில் 18 அதிகாரிகள் மற்றும் 100 விர்ர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.

குறித்த இன் நிகழ்வுக்காக கடற்படை பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல கொடி அதிகாரி கடற்படை கட்டளை ரியர் அட்மிரல் கபில சமரவீர , மின் மற்றும் மின்னணு பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் உபுல் ஏக்கனாயக்க ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட கடற்படை தலைமையகத்தின் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் குறித்த கப்பலின் கன்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அப்பொலுது அவரால் கப்பலின் செயல்திறன், செயல்பாட்டு தயாராதல் மற்றும் அமைப்பு அகிய விடயங்கள் சோதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2017 ஆகஸ்ட் 02ம் திகதி குறித்த கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படை கப்பல் சயுரல என்ற பேரில் அதிகாரம் நியமனம் செய்தல் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய தலமையில் கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ளன.

நவீன போர்கப்பலான இக்கப்பல் இலங்கை கடற்படை 67 ஆண்டுகள் வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் தொழில் நுட்ப கப்பலாக குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இருந்து வெளிநாட்டு கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய இராணுவ கப்பலாக குறித்த கப்பல் சாதனையடையும். மேலும் இக்கப்பல் இலங்கைக்கு கொன்டுவர முன்பு செயற்பாடு நடவடிக்கைகள் சோதனை செய்துக்கொள்வதுக்காக பரிசோதனை சேவைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கப்பளை தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

.2014 ஆண்டு பிப்ரவரி மாதம் 17 திகதி குறித்த வகையிலான இரு கப்பல்களின் கட்டமைப்புகளுக்காக இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினடம் இலங்கை கடற்படையினர் ஒப்பந்தம் கையெழுத்தியது. இதன் விளைவாக இக்கப்பல் தயாரிக்கும் பணிகள் 2014 மே மாதம் 15ம் திகதியும் அதன் அடிப்படை கட்டமைப்பு(Key Laying) பணிகள் 2014 செப்டம்பர் மாதம் 10ம் திகதியும் ஆரம்பிக்கப்பட்டதுடன், வெள்ளோட்ட நிகழ்வு 2016 ஜூன் மாதம் 10ம் திகதி நடைபெற்றது.

குறித்த கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22ம் திகதி இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையாளர் அதிமேதகு திருமதி சித்ராங்கனி வாகீஷ்வர அவர்களின் தலைமையில் கோவா கப்பல் பட்டறையில் நடைபெற்றது. அங்கு கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களுக்கு குறித்த கப்பலை அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. மேலும் இலங்கை கடற்படைக்காக நிர்மானிக்கப்படுகின்ற இரன்டாவது கப்பல் 2018 ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படுவதாக குறிப்பிடதக்கது.