ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி
 

தென் கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (ஜூலை 28) மீன்பிடி படகொன்றில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவியலித்துள்ளது.

கடந்த ஜுலை 25ம் திகதி குறித்த படகு குடாவெல்ல மீன்பிடி துறைமுகம் விட்டு புறப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறை மூலம் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் பற்றிய விடயங்கள் கடற்படையினருக்கு வழங்கிய பிரகு தென் கடற்படை கட்டளையின் பீ 411 அதிவேகத் தாக்குதல் படகு கடலுக்கு புறப்பட்டது.

அதின் பிரகாசமாக அம்பாந்தோட்டை கலங்கரை விளக்கத்தில் சுமார் 37 கடல் மைல்கள் தூரத்தில் இருந்து நோயாளியை அம்பாந்தோட்டை துறைமுகத்திக்கு கொண்டுவந்து முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.