தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துக்கு கடற்படையின் உதவி
 

பாதுகாப்பு தலைமை பணியாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைக்கத்தின் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு இலங்கை கடற்படை பங்களிப்பு வழங்குக்கின்றனர். இதன்பிரகாரமாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இனைந்து நேற்று (ஆகஸ்ட் 03) தொடங்கிய மூன்று நாள் டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடு திட்டத்துக்கும் கடற்படை பங்களிப்பு வழங்கியது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் வழிமுறைகளின் கீழ் அனைத்து கட்டளைகளும் உள்ளடக்கி அப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும். அப்பொலுது குறித்த பாடசாலைகள் கடுமையாக ஆய்வு செய்து சுத்தப்படுத்துவதற்கு கடற்படை பங்களிப்பு வழங்கியது.

இதன்பிரகாரமாக இப்பொலுது வடக்கு கடற்படை கட்டளையின் 07 பாடசாலைகளுக்காக 129 கடற்படையினர்களும், கிழக்கு கடற்படை கட்டளையின் 14 பாடசாலைகளுக்காக 268 கடற்படையினர்களும், தென் கிழக்கு கடற்படை கட்டளையின் ஒரு பாடசாலைகளுக்காக 32 கடற்படையினர்களும், தெக்கு கடற்படை கட்டளையின் 04 பாடசாலைகளுக்காக 55 கடற்படையினர்களும், மேற்கு கடற்படை கட்டளையின் 09 பாடசாலைகளுக்காக 173 கடற்படையினர்களும், வடமேற்கு கடற்படை கட்டளையின் 05 பாடசாலைகளுக்காக 56 கடற்படையினர்களும், வட மத்திய கடற்படை கட்டளையின் 06 பாடசாலைகளுக்காக 125 கடற்படையினர்களும், உட்பட டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகளுக்காக 838 கடற்படையினர்கள் தன்னுடைய பங்களிப்பை வழங்கின்றனர்.

மேலும், கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மற்றொமொரு சமூக நலத் திட்டமாக குறித்த டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்திலும் இந்நோய் நாடு முதுவதும் பரவுவதனை தடுப்பதற்கு கடற்படை தனது முழு முயற்சியையும் செய்துவருவதாக குறிப்பிடத்தக்கது.