04 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக சிறுநீரக நோய் ஆபத்தான பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்குவது குறிப்பிடதக்கது. அதின் பிரகாசமாக ரிதிமாலியத்த, புபல, கெமுனுபுர, செனெவிகம மற்றும் குருவிதென்ன கல்லுரி ஆகிய இடங்களில் மேலும் 04 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (ஆகஸ்ட் 04) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புபுல கிராமத்தில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 325 குடும்பங்களும், கெமுனுபுர பகுதியில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 475 குடும்பங்களும், செனெவிகம பகுதியில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 389 குடும்பங்களும் சுத்தமான குடிநீர் வசதி பெறுகின்றனர். குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் கடற்படை சமுக நலத் திட்டம் மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுகின்றன. இது வரை 246 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 117,564 குடும்பங்களுக்கு மற்றும் 81,636 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.