கடற்படைத் தளபதி ‘சயுரல’ கப்பலுக்கு விஜயம்
 

இலங்கை கடற்படையின் புதிய தொழில்நுட்ப ஆழ்கடல் கவனிப்பு கப்பலான சயுரல கப்பலுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று (ஆகஸ்ட் 08) கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கப்பல் அதிகாரமளித்த பின் கடற்படைத் தளபதி அவர்கள் மேற்கொன்டுள்ள முதல் கண்கானிப்பு விஜயம் இதுவாகும்.

அங்கு கப்பலின் செயற்பாடுகளை பார்வையிட்ட கடற்படைத் தளபதி அவரகள் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் நிஷான்த அமரோசா அவர்கள் உட்பட கப்பலின் ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார். கப்பல் இலங்கைக்கு கொண்டு வந்து அதிகாரமளிக்கும் வரை அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பை கடற்படை தளபதி அவர்களால் பாராட்டப்பட்டது. மேலும் இதக் குறித்து கப்பலின் ஊழியர்களுக்கு பாராட்டு கடிதங்களும் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர்.

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும்தளத்தில் இலங்கை கடற்படைக்கென நிர்மாணிக்கப்பட்ட குறித்த கப்பல் கடந்த ஜூலை மாதம் 28ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக் கப்பல் ஆகஸ்ட் 02 திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலமையில் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படை கப்பல் சயுரல என அதிகாரமளிக்கப்பட்டது. இது இலங்கை கடற்படையின் மிகப்பெரிய உயர் தொழில் நுட்ப கப்பலாக குறிப்பிடத்தக்கது.