இலங்கை கடற்படையின் புதிய தளபதி ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (2017 ஆகஸ்ட் 18) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கடற்படையின் புதிய தளபதி அவர்களுக்கு தனது நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் 1982 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் கெடட் அதிகாரியாக இணைந்து கொண்ட இவர் தாய் நாட்டிற்காக ஆற்றிய சேவையைக் கருத்திற் கொண்டு வீர விக்ரம விபூஷன, ரணவிக்ரம, ரணசூர (மூன்று தடவைகள்) மற்றும் உத்தம சேவா ஆகிய உயர் விருதுகளையும் பதக்கங்களையும் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.

இதே வேளை இதுவரை கடற்படை தளபதியாக பதவி வசித்த வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்

இதன் பிரகாரம் ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களும் அதே தினம் (2017 ஆகஸ்ட் 22) வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு கடற்படை தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்