‘கடற்படை ஜர்னல்’ (Navy Journal) எனும் நாங்காவது சஞ்சிகை வெளியீடப்படும்
 

கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியீடப்படுகின்ற ‘கடற்படை ஜர்னல்’ (Navy Journal) எனும் நாங்காவது சஞ்சிகையின் முதல் பிரதி இன்று (2017 ஆகஸ்ட் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் கொமடோர் ரோஹித பெரேரா அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது கடற்படை உதவியாலர், கடற்படை ஆராய்ச்சி பிரிவின் துணை இயக்குநர் கேப்டன் ரோஹன் ஜோசப் மற்றும் கடற்படை ஆராய்ச்சி பிரிவின் சிரேஷ்ட அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர ஆகியோரும் கலந்து கொண்டனர். கடற்படையினரின் அறிவை விரிவாக்குதல் மற்றும் புதிய ஆராய்ச்சிக்கான போக்கு வளரும் நோக்கத்துடன் குறித்த இச் சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.