அம்பாந்தோட்டை கடற்படை முகாமில் நிர்மானிக்கப்பட்ட நிர்வாக கட்டிடம் கடற்படை தளபதி அவர்களால் திறந்து வைப்பு
 

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கடற்படை முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிர்வாக கட்டிடம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் இன்று (2017 ஆகஸ்ட் 19) திறந்து வைக்கப்பட்டது. 2017 ஏப்ரலில் கட்டுமானப் பணி தொடங்கிய குறித்த கட்டிடம் 03 மாடி கொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வு நினைவுகூறும் வகையில் கடற்படை தளபதியவர்களால் இந் இடத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டது. மெலும் குறித்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நன்றாக முடிவடிக்க பங்கலிப்பு வழங்கிய அனைத்து கடற்படையினருக்கும் தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார்.

இன் நிகழ்வுக்காக தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை தளபதியின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி ரியர் அட்மிரல் உதய ஹேட்டியாரச்சி தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி ஹசித கமகே, சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் கொமடோர் சுசில் சேனாதீர ஆகியோர் உட்பட பல சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர்.