நிகழ்வு-செய்தி

புதிய கடற்படைத் தளபதி அதிமேதகு ஜனாதிபதியுடன் சந்திப்புී
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 22) ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். இவர் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற பின் முதலில் அதிமேதகு ஜனாதிபதியவர்களை சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளார்.

22 Aug 2017

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

22 Aug 2017

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன கடமையேற்பு
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 22ம் திகதி முதல் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

22 Aug 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (ஆகஸ்ட் 21) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மினவர்களை கல்பிட்டி, ஒடக்கரதிவு, சின்ன எருமதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 Aug 2017