சட்டவிரோதமாக 04 மின்னல் கடத்தி தகடுகள் விற்க தயாரான 04 பேர் கைது செய்ய கடற்படையின் உதவி

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஆகஸ்ட் 22) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பொலிஸ் விசேட பணி உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பண்டைக்கால மதிப்புள்ள 04 மின்னல் கடத்தி தகடுகளுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 10 கோடி பெறுமதியான குறித்த மின்னல் கடத்தி தகடுகள் விற்பனைக்காக டிப்பர் மூலம் எடுத்து செல்லும் போது தொடங்கொடை, நேகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர், டிப்பர் மற்றம் கைப்பற்றப்பட்ட மின்னல் கடத்தி தகடுகள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் விசேட பணி பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.