மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்குக்கு இனையாக பயிற்சிகளும் வெற்றிகரமாக நடைபெறும்
 

மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்குக்கு (NOLES) இனையாக நடந்து கொண்டிருக்கும் புலம் பயிற்சிகள் வெற்றிகரமாக தொடர்ந்து எட்டாவது நாளும் வெலிசரை கடற்படை வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்க பசிபிக் கட்டளை ஏற்பாடு செய்யப்பட்ட முன்னணி பலதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டம் படி நடத்தப்படுகின்ற குறித்த புலம் பயிற்சிகளின் ஈடுபடுவர்களுக்கு மக்கள் மற்றும் மக்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று கருத்தியல் மற்றும் நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஐக்கிய அமெரிக்க மரையின் படை மற்றும் இலங்கை கடற்படை இனைந்து ஏற்பாடு செய்துள்ள மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்குக்கு இந்த தடவை 16 வது முறையாக நடைபெற்றது. இதற்காக ஐக்கிய அமெரிக்க மரையின் படையின் 17 பேர் கழந்துகொன்டு இலங்கை கடற்படையினருக்கு மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய பயிற்சிகள் வழங்குகின்றன.

மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்குக்கு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. மரணம் அல்லாத திறன்களைப் பயன்படுத்தல் மூலம் உயிர்கள் மற்றும் சொத்து சேதங்கள் தடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நிலைமைகளின் போது ஏற்படுகின்ற மனித உரிமைகள் மீறல்களைத் தடுத்தல் அதன் முக்கிய நோக்கமானது. ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ள நிர்வாக கருத்தரங்கு மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும் அமைதி ஆதரவு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடல்கள் நடத்த வேண்டிய ஒரு பொதுவான தளம் உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.