சாம்பிய இராணுவ தளபதி வெலிசறை கடலோரக் காவல் ரோந்து படகுகள் கட்டமைப்பு திட்டதிக்கு விஜயம்
 

இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு வந்துள்ள சாம்பிய இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் போல் ஹிஹோவா அவர்கள் இன்று (2017 செப்டெம்பர் 01) திகதி வெலிசறை கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள கடலோரக் காவல் ரோந்து படகுகள் கட்டமைப்பு திட்டதிக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.

குறித்த நிகழ்வுக்காக முகாமையாளர், கடலோரக் காவல் ரோந்து படகுகள் கட்டமைப்பு திட்டம் மற்றும் மூத்த ஊழியர் பொறியியல் அதிகாரி (திட்டமிடல்) கமான்டர் (பொ) தினுக் போகஹவத்த அவர்கள் உட்பட பணியிடத்தில் பல அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.