மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
 

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்க பசிபிக் கட்டளை மரையின் படைவுடன் இனைந்து கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் தொடங்கிய மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்கு இன்று (செப்டம்பர் 01) வெற்றிகரமாக நிறைவடைந்தது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக, கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் கழந்துகொன்டார்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்களின் பங்களிப்பின் மூன்டு நாள் முலுவதாக நடைபெற்ற இக் கருத்தரங்கு மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும் அமைதி ஆதரவு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடல்கள் நடத்த வேண்டிய ஒரு பொதுவான தளம் உருவாக்கபட்டது.

குறித்த கலந்துரையாடல்களுக்கு இனையாக வெலிசரை கடற்படை வளாகத்தில் மரணம் அல்லாத ஆயுதங்கள் பற்றிய பல புல பயிற்சி தொடர்களும் நடைபெற்றன. இதற்காக ஐக்கிய அமெரிக்க மரையின் படையின் 17 பேர் கழந்துகொன்டு இலங்கை கடற்படையினருக்கு மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய புல பயிற்சிகள் வழங்குகின்றன. மரணம் அல்லாத திறன்களைப் பயன்படுத்தல் மூலம் உயிர்கள் மற்றும் சொத்து சேதங்கள் தடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நிலைமைகளின் போது ஏற்படுகின்ற மனித உரிமைகள் மீறல்களைத் தடுத்தல் அதன் முக்கிய நோக்கமானது.

மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்குக்காக கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள், 18 நாடுகள் குறித்து 41 வீரர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை குறித்து 06 பேர் உடபட இலங்கை முப்படை மற்றும் காவல்துரையில் பல மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.