இங்கிரிய பகுதியில் எண்ணைக்கசிவை கட்டுப்படுத்த இலங்கை கடற்பட உதவி.
 

அண்மையில் (2017 செப்டம்பர், 01) மடல இங்கிரிய பகுதியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுசர் வண்டி ஒன்று தடம்புரண்டதினால் ஏற்பட்ட எரிபொருள் எண்ணைக்கசிவினை தடுக்கும் வகையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைப்புப் பெற்றுள்ள கடற்படை வீரர்கள் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

எரிபொருள் எண்ணைக்கசிவானது வடிகாலூடாக சென்று களுகங்கையில் கலக்காதவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மோசமான காலநிலையிலும், கங்கையில் இருந்து எரிபொருள் கசிவை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன. மேலும், இரண்டு அதிகாரிகள் மற்றும் 28 வீரர்கள் உள்ளடங்கிய இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் இருபத்திநான்கு மணி நேரமும் நீர் மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவோரை கைதுசெய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.