புதிய கடற்படைத் தளபதி பொலிஸ் மா அதிபருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (செப்டெம்பர் 04) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமைகைத்தில் வைத்து சந்திதித்துள்ளார். அங்கு அவருக்கு பொலிஸ் சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

கடற்படைத் தளபதி அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் பொலிஸ் மா அதிபருடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் புதிய கடற்படைத் தளபதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.