80 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 76 இந்திய மீனவர்களும் கடலில் மூழ்கிக் கொண்டிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களையும் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (செப்டம்பர் 04) இலங்கை கடற்படையின் உதவியுடன் நடைபெற்றது.

குறித்த 76 மீனவர்களும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை கடல் எல்லை மீறி கீழே இழுத்து செல்லும் முரையில் (Bottom trawling) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கடற்படைனர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ள அவர்களாவார்கள்.

குறித்த இந்திய மீனவர்கள் மீன்டும் ஒப்படைப்பு பணிகள் காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நடைபெற்றது. குறித்த நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையின் L820 கப்பல் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் CG41 வேக தாக்குதல் படகு கலந்துக்கொன்டமை குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் இன்று பகல் இந்திய கடலோர காவல்படையின் 'சாரன்க்' கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.