கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கேரல கஞ்சாவுடன் மூவர் (3) இரண்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அதின் பிரகாரமாக நேற்று செப்டம்பர் 04) வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் யாழ் பொலிஸ் விசேட பணி பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம், காரைநகர் மற்றும் சங்கானி பகுதிகளில் வைத்து 04 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் (2) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கேரல கஞ்சா பொதி மோட்டார் சைக்கிள் மூலம் எடுத்துசெல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர்கள் மற்றம் கைப்பற்றப்பட்ட கேரல கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக யாழ் பொலிஸ் விசேட பணி பிரிவு தலைமையகத்திக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2ம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மன்னார் மற்றும் தரகன்கோட்டை பகுதிகளில் வைத்து மோட்டார் சைக்கிள் மூலம் எடுத்துசெல்லும் போது 3.860 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், மோட்டார் சைக்கிள் மற்றம் கைப்பற்றப்பட்ட கேரல கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.