'நீர்க்காக கூட்டு பயிற்சி பார்வையிட கடற்படை தளபதி கழந்துக்கொன்டார்
 

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 8வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி கிழக்குப் பிராந்தியத்தை மையமாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுகிறது. அதின் சிறப்பு நிகழ்வான எதிரியின் முகாமத்துவக்கு தாக்குதல் மேற்கொள்ளும் நிகழ்வு பார்வையிட இன்று (செப்டம்பர் 13) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி திரு. கபில வைத்தியரத்ன ஆகியவர்கள் கழந்துக்கொன்டனர்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ன, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா , விமானப்படை தளபதி எயார் மாஷல் கபில ஜயம்பதி, இராஜதந்திர உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட காவல்துறை மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்கள முனை போர் பயிற்சியில் 370 கடற்படை 197 விமானப்படை, இயந்திரமய காலாட்படை பிரிவு மற்றும், விஷேட படையினர் மாறும் கொமாண்டோ படையினர் உட்பட 2160 இராணுவ வீரர்கள் கலந்துகொன்டனர். அத்துடன் பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், சூடான், ஈராக், இஸ்ரேல், ஓமான், துருக்கி, ஈரான் மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் இருந்து 69 வெளிநாட்டு இராணுவ வீரர்களும் இப் பயிற்சியில் பங்கேட்டனர்.

இப் பயிற்சி கடந்த செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி மின்னேரியாவில் இராணுவ காலாட்படை பயிற்சி மையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.  கடற்படை பணிப்பாளர் கடற்படை தரை நடவடிக்கைகள்  கொமடோர் உதேனி சேரசிங்க அவரின் தலைமையில் கடற்படையினர் குறித்த இப் பயிற்சியில் பங்கேட்டனர்.

நேச படைகளின் பரஸ்பர நல்லெண்ணத்தையும் செயல்பாட்டு திறனையும் மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் தற்போது நடைபெற்றிருக்கும் இப் பயிற்சிக்காக கடற்படைனர்கள் உட்பட இலங்கை கடற்படை கப்பல் ரனஜய, எடிதர, மற்றும் விக்கிரம II ஆகிய கப்பல்களும், L 820, L 821 ஆகிய படகுகளும் கடலோரகாவல் படையின் 10 படகுகளும் கழந்துகொன்டனர்.