கடற்படை சிவில் ஊழியர்களால் கடற்படை தளபதியை வரவேற்கப்பட்டது
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை வரவேற்கும் விழா இன்று (செப்டம்பர் 18) இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க அவைக்களத்தில் நடைபெற்றது. குறித்த விழா கடற்படை சிவில் ஊழியர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டது.

அங்கு கடற்படை சிவில் நிர்வாக இயக்குநர், திருமதி துஷீதா குமாரி திஸாநாயக்க மூலம் கடற்படை தளபதியவர்களை வரவேற்கப்பட்டது. அதன் பிரகு பாரம்பரிய எண்ணெய் விளக்கு எரிந்த பிறகு, குறித்த விழா தொடங்கியது.

சிவில் ஊழியர்களை உரையாற்றிய கடற்படை தளபதியவர்கள் கடற்படையின் கடமைகள் மற்றும் நிர்வாகத்தை முன்னெடுக்க அவர்களால் வழங்கும் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்காக நன்றியுணர்வை வெளிப்படுத்தினர். மேலும் கடற்படையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகின்ற வெற்றிகரமான திட்டங்களுக்கு சிவில் ஊழியர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பங்களிப்பு தேவை என்று வலியுறுத்தினார்.

இன் நிகழ்வு நினைவு கூறும் வகையில் சிவில் நிர்வாக இயக்குநர் அவர்களால் கடற்படை தளபதியவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வுக்காக கடற்படை தலைமைகைத்தில் மூத்த அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்கள் கழந்துகொன்டனர்.