கடற்படை தளபதி புதிய கடலோரக் காவல்படை கப்பலுக்கு விஜயம்
 

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை பார்வையிடவென இன்று (செப்டம்பர் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு அவருக்கு சிறப்பு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க ஆகியோர் உட்பட மூத்த கடற்படை அதிகாரிகள் கழந்துகொன்டனர்.

குறித்த கன்கானிப்பு விஜயத்தின் போது கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் நெவில் உபேசிரி அவர்களால் கப்பலின் செயற்பாடுகள், தயார்நிலை மற்றும் தயாரிப்பு தொடர்பாக கடற்படை தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. கடற்படை தளபதியவர்களின் முதலாம் கன்கானிப்பு விஜயமான இவ் விஜயத்தை நினைவு கூறும் வகையில் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவு புத்தகத்தில் அவர் ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவாக்கும் நோக்கத்தின் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய இக் கப்பலின் 10 கடற்படை அதிகாரிகள் மற்றும் 98 கடற்படை சிப்பாய்கள் பணி புரியும்.வசதிகள் கொன்டுள்ளது.